×

தொகுதி ஒதுக்கீட்டில் மனக்கசப்பு: டெல்லி காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா

புதுடெல்லி: தொகுதி ஒதுக்கீட்டில் தலைமையுடன் மனக்கசப்பு ஏற்பட்டடதால் டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி திடீர் ராஜினாமா செய்தார். நாடாளுமன்ற தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 7ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியின் 7 ெதாகுதிகளுக்கும் வரும் மே 25ம் தேதி 6வது கட்டமாக நடக்கிறது. டெல்லி முதல்வரும் ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ளார். தற்போதைய தேர்தலில் ஆம்ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி அமைத்து எதிர் கொள்கின்றன.

இந்த கூட்டணியை எதிர்த்து பாஜக களம் காண்கிறது. இந்நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி, திடீரென இன்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியுள்ளார். மேலும் அந்த கடிதத்தை சமூக ஊடகங்களிலும் வெளியிட்டுள்ளார். வடமேற்கு டெல்லியில் ராஜ்குமார் சவுகான் என்பவருக்கு தேர்தலில் சீட் ஒதுக்க கட்சி தலைமையிடம் அரவிந்த் சிங் லவ்லி முறையிட்டார். ஆனால் அவருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. அதனால் கட்சி தலைமையுடன் அரவிந்த் சிங் லவ்லிக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post தொகுதி ஒதுக்கீட்டில் மனக்கசப்பு: டெல்லி காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Delhi Congress ,New Delhi ,president ,Arvind Singh Lovely ,Delhi ,
× RELATED 2 காங். முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜினாமா